திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்
ADDED :1417 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி நம்பி கோயில் மற்றும் வனப்பகுதியை வெளிநாட்டினர் குடும்பத்துடன் பார்வையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் திருக்குறுங்குடி நம்பி கோயில் மலை முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறை நாட்களில் வந்து செல்கின்றனர். மலைநம்பியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில்வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தோடு நம்பி கோயில் மலைக்கு சுற்றுலா வந்தனர். பாரஸ்ட்செக் போஸ்ட்டிலிருந்து நடந்து சென்று, மலைநம்பியை தரிசனம் செய்தனர். நம்பியாறு, சங்கிலி பூதத்தார் கோயில், உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டனர்.