நெல்லை டவுனில் தியாகராஜர் ஆராதனை மஹோத்ஸவம்
ADDED :1409 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் 91ம்ஆண்டு தியாகராஜர் ஆராதனை மஹோத்ஸவம் 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் ஆராதனை பஜனை, சங்கீத இன்னிசைகச்சேரி நடந்தது. ஆராதனை உற்சவத்தன்று காலை 9.30 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக்கலைஞர்கள் பாடினர். தொடர்ந்து மாலை வரை சங்கீத இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு ஆஞ்சநேய உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் பி.என்.கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாச்சலம், கோவிந்தன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.