உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டில்லி முருகன் கோவில் செயற்குழு

டில்லி முருகன் கோவில் செயற்குழு

சென்னை,:டில்லி முருகன் கோவில் செயற்குழுவுக்கு, இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.டில்லியில், மலை மந்திர், டில்லி முருகன் கோவில் என்று அழைக்கப்படும், சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இதன் நிர்வாகக் குழுவை அகற்றக் கோரி, அந்தக் கோவிலின் முன்னாள் அர்ச்சகர் சுந்தரேச குருக்கள், அவரது மகன் தேஜஸ் கந்தன். கோவில் பூஜை அறக்கட்டளை உறுப்பினர்களான சோமாஸ்கந்த குருக்கள், சுரேந்தர் சிங்க் நாகர் ஆகியோர், டில்லி பட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது, கடந்த ஆண்டு அக்டோபரில், பாலசுப்ரமணியன் தலைமையில், 21 பேர் அடங்கிய புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குழு தற்போது கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்தக் குழுவை அகற்றக் கோரும் மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், இந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புதிய நிர்வாகக் குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றம் கோவிலுக்கு ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கோரி, மூன்று இடைக்கால மனுக்களை, கடந்த நவம்பர் மாதம், பாலசுப்ரமணியன் குழு தாக்கல் செய்தது.முதல் இரண்டு மனுக்களும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது மனு மீதான விசாரணை, கடந்த 11ம் தேதி நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராம்லால் மீனா, நிர்வாக அதிகாரி நியமனம் குறித்த கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டார்.மூன்று இடைக்கால மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாலசுப்ரமணியன் தலைமையிலான, புதிய செயற்குழு செயல்படுவதற்கான தடை நீங்கி உள்ளது. எனினும், மூல வழக்கு மே மாதம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !