வீரக்குமாரசாமி தேர் திருவிழா: தேர் கலசம் வைத்தல் நிகழ்ச்சி
ADDED :1359 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி 139 ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 1ம் தேதி தேர் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு நேற்று காலை தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வீரகுமார சாமி கோவிலில் கலசம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வலம் வந்து தேரில் வைத்து பூஜை செய்தனர். இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராமநாதன், நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் கோவில் முன்னாள் அறங்காவலர்கள் முத்துக்குமார், ராமசாமி, சேகர் உட்பட கோவில் குலத்தவர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.