விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :1358 days ago
புதுச்சேரி: சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில் இன்று ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.புதுச்சேரி அண்ணா நகர் விரிவாக்கம் 8வது குறுக்கு தெருவில் சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் இன்று 24ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை நடக்கும் சொற்பொழிவில், ஜோசப் சொற்பொழிவு ஆற்றுகிறார்.இதில், சீர்காழி தடாளப்பெருமாள் கோவில் வரலாறு மற்றும் தடாளப் பெருமாளை புகழ்ந்த ஆழ்வார்களின் பாசுரங்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.