மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா
ADDED :1356 days ago
மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1 இரவு முதல் நடை திறந்திருக்கும். அன்று அம்மன், சுவாமி மற்றும் உற்ஸவ சன்னதிகளில் விடிய விடிய அபிஷேக, ஆராதனை நடக்கும். அபிஷேக பொருட்களை மார்ச்1 மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம். அன்றிரவு 10:00 மணி முதல் அம்மன் சன்னதியிலும், இரவு 11:00 மணி முதல் சுவாமி சன்னதியிலும் பூஜை தொடங்குகிறது.