இல்லறமே நல்லறம்
ADDED :1353 days ago
வாழ்வில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு நிலைகள் இருப்பதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பிரம்மச்சர்யம் திருமணத்திற்கு முந்தியநிலை. கிருஹஸ்தம் என்பது மணவாழ்வைக் குறிக்கும். வானப்பிரஸ்தம் வனத்தில் தவம் செய்வதாகும். சந்நியாசம் உலகவாழ்வை துறத்தல். இதில் கிருஹஸ்தம் என்னும் குடும்ப வாழ்வில் இருப்பவனே மற்ற மூவருக்கும் தேவையான உணவு, உடை உள்ளிட்ட தர்மத்தைச் செய்பவன்.
இல்லறத்தின் பெருமையை, “அறவழியில் இல்லறம் நடத்தும் ஒருவன் பிரம்மச்சர்யம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் போன்ற மற்ற வழிகளில் செல்லத் தேவையில்லை” என்கிறார் திருவள்ளுவர். இதே கருத்தை ‘இல்லறமல்லது நல்லறம் அன்று’ என அவ்வையாரும் வலியுறுத்துகிறார்.