சுதந்திரமா? கட்டுப்பாடா?
ADDED :1352 days ago
திருமணம் என்பது இருவரை இணைக்கிற பந்தம். அதாவது கட்டுவது. கட்டிப்போட்டால் சுதந்திரக்காற்றை எப்படி சுவாசிக்க முடியும்? என்று பலரும் யோசிக்கிறார்கள். ஆனால் மணவாழ்வின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இப்படி சொல்ல மாட்டார்கள்.
உலக வாழ்வை ‘சம்சார சாகரம்’ என்று சொல்வர். இந்த பிறவிக்கடலை நீந்தி கரை கடக்க வேண்டுமானால் துணை தேவைப்படுகிறது. அதனால் தான் மனைவியை ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்றார் திருவள்ளுவர். பெண்ணைக் கண் போல காப்பவன் என்பதாலே ‘கணவன்’ என்றனர். ஓருயிர் ஈருடல் என்பது போல தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் மணவாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.