கருமத்தம்பட்டிக்கு வந்த ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பு
ADDED :1363 days ago
சூலூர்: பெங்களுரூவில் இருந்த புறப்பட்ட ஆதியோகி ரதத்துக்கு, கருமத்தம்பட்டி அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும். சிவராத்திரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி சிவன் உருவம் தாங்கிய ரதங்கள், கோவை ஈஷா யோக மையத்துக்கு வந்து கொண்டுள்ளன. பெங்களுரூவில் இருந்து புறப்பட்ட ரதம், அவிநாசி, தெக்கலூர் வழியாக கருமத்தம்பட்டிக்கு வந்தது. அங்கு, தியாகராஜன் தலைமையில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். வழிபாட்டுக்கு பின், கோவை நகருக்கு ரதம் நேற்று புறப்பட்டு சென்றது. இதேபோல், கொச்சியில் இருந்து வந்த மற்றொரு ரதத்துக்கும், சூலூர் அருகே பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.