சூலூரில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் துவக்க விழா
ADDED :1362 days ago
சூலூர்: பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், 12 ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி, சூலூரில் இன்று துவங்குகிறது.
கோவை பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், ஆர்.வி.எஸ்., குழுமம் சார்பில், 12 ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி, சூலூரில் இன்று துவங்குகிறது. ஆர்.வி.எஸ்., செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த தரிசனத்துக்கு அனுமதி இலவசம். தினமும் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி தரிசிக்கலாம். சிவராத்திரி தினமான, மார்ச் 1 ம்தேதி இரவு முழுக்க தரிசனம் செய்யலாம். மேலும், தினமும் பல கலந்துரையாடல்கள் நடக்கின்றன.