வெண்ணைத்தாழி கண்ணன் கோலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
சென்னை: பார்த்தசாரதிப் பெருமாள் ப்ரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று (27.02.2022) காலை 6.30 மணிக்கு, ஸ்ரீ.பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணைத்தாழி கண்ணனாக தனியாக பெரிய பல்லக்கிலும், உபயநாச்சிமார்கள் சிறிய பல்லக்கிலும், ஸ்ரீ.விஷ்வக்ஷேனர் இனௌனொருசிறிய பல்லக்கிலும் பெரிய மாட வீதிகளில் எழுந்தருளி ஸேவை ஸாதித்தனர்.
வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ.பார்த்தசாரதிப் பெருமாள் வீதிகளில் எழுந்தருளும் போது பத்தர்கள் தட்டில் வெண்ணையையும், பழங்களையும், கற்பூரத்தையும் வைத்து பெருமாள் ஸேவைக்கு கொடுப்பார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வீதி புறப்பாடு சில சமயங்கள் இருந்தாலும் கொரோனா காரணாமாக யாரிடமும் தட்டு வாங்காமல் பெருமாளை எழுந்தருளப் பண்ணுவார்கள். இன்று பெருமாள் அனுக்ரஹத்தால் வீதிகளில் அங்கங்குள்ள அகங்களுக்கு முன்பு இடங்களில் பத்தர்களிடமிருந்து வெண்ணையையும், கற்பூரத்தையும், பழங்களையும் கொண்ட தட்டை பெற்று, பெருமாளுக்கு ஸேவை ஸாதித்து பத்தர்களிடம் பட்டர் ஸ்வாமிகள் கொடுத்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று தான் திருவல்லிக்கேணி மாட வீதிகளில் வசிக்கும் பத்தர்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்தது.