மகாசிவராத்திரி: அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரர் உலா
ADDED :1360 days ago
சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாளான இன்று காலை அன்ன வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல் இன்று இரவு 27.2.2022 இரவு 10 மணிக்கு ராவண வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மயில் வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயாரும் கோயிலின் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு (உற்சவ மூர்த்திகளுக்கு) ஊர்வலமாக கொண்டு வந்ததோடு ராஜகோபுரம் அருகில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்த பின்னர் வாகனங்களில் அமர்த்தி நான்கு மாட வீதிகளில் சாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.