வேலங்குடி மாசிக்களரி திருவிழா துவக்கம்
திருப்புத்தூர்: திருப்புத்துார் ஒன்றியம் எஸ்.வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயிலில் மாசிக் களரித் திருவிழா துவங்கியது.
இக்கோயிலில் மாசிக் களரித் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பிப்.,25ல் ஊர் எல்லையில் வழிபாடு நடந்து காப்புக் கட்டி விழா து வங்கியது. இன்று அங்காள பரமேஸ்வரி அம்பாள் காலையில் கருப்பர் கோயிலில் எழுந்தருளலும், தொடர்ந்து அரிவாளில் சாமியாடி கப்பரை நடைபெறும். மார்ச் 1 சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 2ல் பாரி வேட்டை நடைபெறும். தொடர்ந்து மார்ச் 4 ல் முதல் திருவிழாவன்று காலையில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகளும், மார்ச் 5ல் இரண்டாம் திருவிழாவில் நள்ளிரவு அரிவாளில் சாமியட்டமும், மார்ச் 6ல் மூன்றாம் திருவிழாவும், மார்ச்7 ல் அங்காள பரமேஸ்வரி,கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள்நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.