பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
பாளை: பாளை ராஜகோபாலசுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பாளையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் இருந்ததேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து கோயிலுக்கு புதிய தேர் செய்யவேண்டும் எனபக்தர்கள் வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின் பேரில் ராஜகோபாலசுவாமி கைங்கர்யசபா மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டதேர் செய்யப்பட்டுள்ளது. 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன்எடையுள்ள 5 அடுக்குகள் கொண்ட புதிய தேர் செய்வதற்கான பணிகள் கடந்த 2020ம் ஆண்டு காஞ்சிபுரம் கஜேந்திரன்ஸ்தபதி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபுதிய தேருக்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ‘கோவிந்தா, கோபாலா’ கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். இதில் கைங்கர்யசபா செயலாளர் விநாயகராமன், பொருளாளர் சத்தியமூர்த்தி, உபதலைவர் ரெங்கநாதன், துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் மற்றும் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் சாரதா கல்லுாரி மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்தனர். ௫ ஆண்டுகளுக்கு பின்கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டிருப்பது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.