உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஊரல்கரையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு மாசி மயான கொள்ளை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு கிருஷ்ணன், அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, காட்டேரி வேடங்கள் அணிந்த பக்தர்களின் வீதியுலா நடந்தது. மதியம் 2:00 மணிக்கு கீழ்பெரும்பாக்கம் மயானத்தில் மயான கொள்ளையும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 6ம் தேதி, இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !