காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்
சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6 ஆவது நாள் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 3:00 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் அதிகாரிகள் இன்று சாமி தரிசனம் செய்ய லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று சிறப்பு கூடுதல் வரிசைகளை ஏற்பாடு செய்திருந்தனர் .அதில் குடிநீர் , போர், பால் உட்பட பிஸ்கட் ஆகியவை கோயில் ஊழியர்கள் பக்தர்களுக்கு வழங்கினர். மகாசிவராத்திரியை யொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளாலும் பல வண்ண மலர்களாலும் பல வகை பழங்களாளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை கண் கவரும் வகையில் இருந்தது. காலை 11 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த தோடு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தனர் இதனைத் தொடர்ந்து தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிம்ம வாகனத்தில் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் ஊர்வலத்தின் போது கோலாட்டம், மயிலாட்டம் ,பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் , பன்டரி பஜனைகள் , மற்றும் பல்வேறு சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு மங்கல வாத்தியங்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.