மஹா சிவராத்திரி: நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு
பிரயாக்ராஜ்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்; 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள நேற்று கங்கையில் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின், தாராகஞ்ச் நகரில் உள்ள நாக்வாசுகி மற்றும் யமுனை நதிக் கரையில் உள்ள மங்காமேஷ்வர் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை முதல் ஏராள மான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடுகளை நடத்தினர். அத்துடன், கங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் கூறினர். பக்தர்களின் வசதிக்காக, கோவில்களின் சுற்றுப் பகுதிகளில், 650 நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், தற்காலிக மருத்துவமனை மற்றும் முதல் உதவி மையங்களும் செயல்பாட்டில் இருந்தன.இதுபோல நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.