சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் மகா சிவராத்திரி
சாணார்பட்டி: சிறுமலை அகஸ்தியர்புரத்திலுள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
சித்தர் பீடத்தில் மாலை 6 மணிக்கு சிவசக்தி ரூபினி அம்மன் சிலை முன் யாக வேள்வியுடன் சிவராத்திரி விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை, 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நல்லிரவு 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. அவனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய விடிய கண்விழித்து சிவபெருமானை தரிசித்தனர். இதைப்போலவே கோபால்பட்டி அருகே உள்ள சிவ தாண்டவ பாறை, ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா விடிய விடிய நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கண்விழித்து தரிசனம் செய்தனர்.