சிதம்பரத்தில் 41ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் 41ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. பத்ம பூஷன் விருது பெற்ற தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்ஜெயன் பங்கேற்று விழாவை துவக்கி வைத்தனர்.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சிதம்பரம் வி.எஸ் ட்ரஸ்ட் வளாகத்தில் துவங்கி விழா 5 ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிவராத்திரி நாளான நேற்று மாலை 6.15 மங்கல இசையுடன் துவங்கி விழாவில் 6.30 க்கு மைசூர் அனுஷாராஜ் பரதம், 7.30 க்கு சென்னை சரஸ்வதி கான நிலையம் "அருட்பெருஞ்சோதி பரதம், 8.10 க்கு ஹைதராபாத் ஹிமன்சே கத்ரகட்டா வின் கூச்சுப்புடி, 8.45 க்கு இத்தாலி லுக்ரேசியா மனிஸ்காட் பரதம், 9.15 க்கு ஜெய்ப்பூர் மானஸ்வினி ஷர்மா கதக், 9.55 க்கு பெங்களூரு சிருஷ்டிகலா நாட்டி பள்ளி மாணவிகளின் பரதம், 10.30 க்கு பெங்களூரு நிருத்யா கலைக்கூடம் பரதம் ஆகியன நடன அரங்கேற்றம் நடந்தது. முன்னதாக நடந்த துவக்க விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி வரவேற்றார். செயலாளர் சம்மந்தம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பத்மபூஷன் விருது பெற்ற தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் பங்கேற்று விழாவை துவக்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர் அருள் மொழி செல்வன், கணபதி, இராமநாதன், பழனி, நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறைந்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளரும், மத்திய தொல்லியல் துறை இயக்குனருமான நாகசாமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.