உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்!

வேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்!

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நேற்று துவங்கியது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2000மாவது ஆண்டு ஜூலை 20ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவிலை புதுப்பித்து மீ ண்டும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி திருப்பணிகள் துவக்க விழா நேற்றுக்காலை 11 மணிக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் ஸ்வாமிகள் பங்கேற்று, பூஜைகளை நடத்தி திருப்பணிகளை துவக்கி வைத்தார். மேலும் தேர் திருப்பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் செயல்அலுவலர் அ ரசுமணி, உபயதாரர்கள் வேதரத்தினம், கேடிலியப்பன், அம்பிகாதாஸ், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சங்கரவடிவேல், நகர அ.தி.மு.க., செயலாளர் எழிலரசு, கோவில் மேலாளர் பழனிவேல், விஸ்வர்ம கைவினைஞர்கள் சங்கத்தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்றத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !