நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு இன்று வளைகாப்பு!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருநாளின் நான்காம் நாளான இன்று (16ம் தேதி) காந்திமதியம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. காந்திமதியம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 4ம் திருநாளான இன்று பகல் 12 மணிக்கு காந்திமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. வளைகாப்பு உற்சவத்தை தொடர்ந்து பெண்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம், வளையல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.இரவு 8 மணிக்கு காந்திமதி சன்னதியில் இருந்து சுவாமிஅம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் வீதியுலா நடக்கிறது.4ம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிக்கு கம்பர் சமுதாயத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.