திருவண்ணாமலை அடி அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4865 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடி அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த 10ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெற்றன, நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜை முடிந்து, மேளதாளம் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழுங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷமிட்டனர். அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருவண்ணாமலை நகராரட்சி தலைவர் பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.