ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 7.15 மணிக்கு கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி மேள தாளத்துடன் நான்கு மாட வீதிகள் சுற்றி வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டு ரகுராம பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தது. இரவு 11 மணிக்கு பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் ஸ்ரீராம், வேதபிரான்பட்டர் சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஐந்தாம்நாளான 19ம் தேதி காலை பெரியாழ்வார் மங்களாசனமும், இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவையும் நடக்கிறது. ஏழாம் நாள் கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.