கோபத்தைப் போக்க எந்த தெய்வத்தை வணங்குவது?
ADDED :1343 days ago
விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம்அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில்பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல முடியும்.