சில கோயில்களில் மூலவர் மேற்கு நோக்கி இருப்பது ஏன்?
ADDED :1343 days ago
பெரும்பாலும் கோயில் கிழக்கு நோக்கியேஇருக்கும். பழமையான கோயில்கள் மேற்கு நோக்கி இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. சுவாமி எந்த திசை நோக்கி இருந்தாலும், வாசலை கிழக்கு திசையாகப் பாவித்து வணங்க வேண்டும் என சில ஆகமங்களும், மேற்கு திசை நோக்கிய சிவலிங்கம் சிறப்புடையது என சில ஆகமங்களும் கூறுகின்றன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இரண்டுமே சிறப்புடையவை தான்.