பரமக்குடி சிங்காரத்தோப்பில் 115 வது ஆண்டு சிவராத்திரி விழா
ADDED :1347 days ago
பரமக்குடி:பரமக்குடி சிங்கார தோப்பில் உள்ள மகாகால கருப்பணசாமி கோயில் 115 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 1 ல் புஷ்ப அலங்காரம், சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பச்சிலை பரப்புதல், கரகம், அரிவாள் எடுத்து பாரி வேட்டை நடந்தது. மறுநாள் சிறப்பு பட்டிமன்றம், விசேட ஆராதனைகள் நடந்து சேவல் காவு கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து சந்தனக் காப்பில் அருள்பாலித்த கருப்பண சுவாமிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.