குறிச்சியில் அரவான் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா
போத்தனுார்; கோவை, குறிச்சி அரவான் திருவிழா கடந்த, 16ல் எல்லை கட்டுதல், அரவான் சுவாமிக்கு உயிர் பிடித்தலுடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை சீர்முறை வழிபாட்டிற்கு பின், அரவான் திருவீதி உலா துவங்கியது. மக்கள் கூட்டத்திற்கு நடுவே, அரவான் ஆட்டம் களை கட்டியது. ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்குரிய பூஜைகளை நடத்தினர். ரவுண்டு ரோடு, பொள்ளாச்சி ரோடு, பெருமாள் கோவில், முருகா நகர், சுந்தராபுரம் பகுதிகளில் பூஜைகளை முடித்த பின், அரவான் மீண்டும் பெருமாள் கோவிலை சென்றடைந்தார். அங்கு கிருஷ்ணர், அரவானுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து களப்பலி மேடைக்கு சென்றார். அங்கு வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்ட பின், களப்பலி நடந்தது. விழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. போத்தனூர், சாரதா மில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.