விழுப்புரம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED :2 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோவிலில், 43ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, கன்னிமூல கணபதி, வண்ணான்குளம் கருப்பசாமி, சபரிகிரிசன் சுவாமிகளுக்கு பால், தயிர், நெய், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 51 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின், குருசாமிகள் பாலு, மணிகண்டன் தலைமையில் அய்யப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளில் தீபம் ஏற்றி சரண கோஷமிட்டு வழிபாடு செய்தனர். இதில், சபரிகிரீசன் ஹரிகரசுத னாக சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.