ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் 108 கலசாபிஷேகம்
ADDED :1347 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவாக மண்டாலபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. சிறப்பு யாகம் செய்யப்பட்டு 108 கலசாபிஷேகம் 108 சங்காபிஷேகம் ஜெயங்கொண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி அலங்காரம் செய்விக்கும் பெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. ரமணி, ஜானகிராமன் , சங்கர் யாகம் நடத்தி பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், அலுவலர்கள், கோயில் நிர்வாகிகள் வீரசேகர், முன்னாள் விஏஓக்கள் சோலை, வடிவேலு உட்பட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.