பழநி மலைக்கோவில் செல்ல மங்கம்மாள் மண்டபம் வழியே பக்தர்கள் அனுமதி
பழநி: பழநி மலைக்கோவில் செல்ல மங்கம்மாள் மண்டபம் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
பழநி மலைக்கோயில் செல்ல கொரோனா வழிகாட்டு நெறிமுறை மற்றும் பாத விநாயகர் கோயில் பின்புறம் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில் மாமரத்து பணிகள் நடைபெற்றது. எனவே குடமுழுக்கு நினைவரங்கம் வழியே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு வழிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதாலும், மங்கம்மாள் மண்டப மராமத்து பணிகள் நிறைவு பெற்றதாலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல பாத விநாயகர் கோயிலில் இருந்து மங்கம்மாள் மண்டபம் வழியே யானைப்பாதை மூலம் மலைக்கோயில் செல்லலாம். இன்று முதல் பக்தர்கள் செல்ல மங்கம்மாள் மண்டபம் திறந்து விடப்பட உள்ளது. மங்கம்மாள் மண்டபம் மூலம் யானை பாதையை அடைந்து மேலே சென்ற பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரலாம் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.