கோவில் இட வாடகை ரூ.120 கோடி வசூல்
ADDED :1348 days ago
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு 120 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த ஆண்டு அக்டோபரில் கணினி வழியாக வாடகை குத்தகை செலுத்தும் திட்டமும்; நவம்பரில் இணைய வழி ரசீது வழங்கும் திட்டமும் துவங்கப்பட்டது. கோவில்களில் அசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை குத்தகை கணக்கிடப்படுகிறது.அதன்படி நடப்பு பசலி ஆண்டு ௨௦௨௧ ஜூலையில் துவங்கியது. பிப்வரி வரை 120 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.