ஆனந்தாயி கோவிலில் தெப்பத்திருவிழா
ADDED :1412 days ago
இடைப்பாடி: இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி, ஆனந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசி மாத உற்சவம் கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக தீ மிதி விழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று தெப்பத் திருவிழாவில் ஊஞ்சல் சேவை நடந்தது. தெப்பகுளத்தில் இருந்து ஆனந்தாயி ஸ்ரீஅங்காளம்மன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இடைப்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து, 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.