பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கியது மாசித்திருவிழா
ADDED :1351 days ago
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கியது.பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகரை வலம் வந்தார். இன்றிரவு முதல் நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், மின் அலங்கார ரதத்தில் இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.மார்ச் 13ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 15 முதல் 19 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச் 20 இரவு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 21ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்ச் 22ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுகன்யா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.