வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா
ADDED :1351 days ago
திருமங்கலம்: தமிழகம், கேரள பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்களின் குலத்தெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் கள்ளிக்குடி தாலுகா வடக்கம்பட்டியில் உள்ளது.இக்கோயிலில் தை 2வது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமூகத்தினரும், மாசி 2வது வெள்ளிக்கிழமை மற்றொரு சமூகத்தினரும் திருவிழா நடத்தி பிரியாணி பிரசாதம் வழங்குவர். கொரோனா கட்டுப்பாட்டால் தை மாதம் விழா நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்குபின் நேற்று நடந்த திருவிழாவில் பால்குடம், பூத்தட்டு ஊர்வலம் எடுத்து வந்து சுவாமிக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.பின்னர் 120 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் இடப்பட்டது. 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயாரித்து பிரசாதமாக வழங்கப்பட்டது.