உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா: பக்தர்கள் நேர்த்திக் கடன்

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா: பக்தர்கள் நேர்த்திக் கடன்

செஞ்சி, : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 5ம் நாள் விழாவாக தீமிதி விழா நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர்.

பிற்பகல் 3:30 மணியளவில் அக்னி குளத்தில் இருந்து உற்சவர் அங்காளம்மன், வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது.மாலை 4:30 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தை வந்தடைந்தது. அங்கு, சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து கோவில் பூசாரிகளும், காப்பு கட்டி விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று இரவு 8:00 மணி வரை தீ மிதித்தனர்.முன்னதாக அம்மன் ஊர்வலத்தில், பறவைக்காவடி மூலம் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து நாளை 7ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !