உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் வாடகை பாக்கி ரூ.3.38 கோடி வசூல்

கோவில் வாடகை பாக்கி ரூ.3.38 கோடி வசூல்

சேலம் : சேலம், தர்மபுரி மாவட்டங்களில், கோவில் இடங்களுக்கான வாடகை பாக்கி 3.38 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் சேலம் மண்டலத்தில், சேலம், தர்மபுரியில், 2,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

கோவிலுக்கு சொந்தமான நிலம், கட்டடம், வீடு ஆகியவை குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுஉள்ளன.சிலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துஉள்ளனர். இவ்வாறு நிலுவை வைத்திருப்பவர்களிடம் இருந்து, வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கோவிலுக்கான நிலுவை வாடகை, 14 கோடி ரூபாய் உள்ளது. இந்த தொகையை வசூல் செய்ய, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவில் உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வாடகை தொகையை வசூலித்து வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று வரை, 3 கோடியே 38 லட்சத்து 12 ஆயிரத்து 418 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. வாடகை செலுத்தவில்லை என்றால் நோட்டீஸ் வழங்கி, கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !