உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரோட்டத்திக்கு தயாராகும் குன்றத்து தேர்

தேரோட்டத்திக்கு தயாராகும் குன்றத்து தேர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டத்திற்காக கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத் தேர் அலங்கரிக்கும் பணி துவங்கியது மார்ச் 21ல் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள கிரி வீதியில் தேரோட்டம் நடக்கும். அதற்காக கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள தேர் தண்ணீர், எண்ணெய் மூலம் தூய்மை பணி முடிந்து, தேரின் உச்சிப் பகுதியில் கொடுங்கை அமைத்து அலங்கார வண்ண குடைதுணிகள், முன் பகுதியில் நான்கு குதிரைகள் பொருத்தப்படும். இதற்கான பணிகள் நேற்று துவங்கியது ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி திருவிழாவில் மட்டுமே இந்த தேர் புறப்பாடாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !