உழவாரப்பணி செய்வது ஏன்?
ADDED :1383 days ago
திருநாவுக்கரசர் கையில் உழவாரப்படை என்னும் கருவி இருக்கும். இதன் மூலம் அவர் கோயில்களில் உள்ள புற்கள், தேவையற்ற செடிகளைச் செதுக்கி சுத்தம் செய்வார். ஒருமுறை, சுத்தம் செய்யும் போது, கோயில் பிரகாரத்தில் தங்க நாணயங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார். அதையும் கு ப்பையாகக் கருதி ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார். பொன்னையும் துச்சமாகக் கருதிய அவர் முன், சிவன் தோன்றி அருள் புரிந்தார். இவரைப் ÷ பால், எதிர்பார்ப்பு இல்லாமல் கோயில் பணி சேவை செய்வோருக்கு கடவுளின் கருணை கிடைக்கும்.