உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையான பிரார்த்தனை!

உண்மையான பிரார்த்தனை!


டாக்டர் ஒருவர் தினமும் ஜெபம் செய்வார் . ஒருமுறை ஒரு ஏழை இளைஞன், தன் மருத்துவ தேவைக்காக அவரைத்தேடி வந்தான். அவனிடம் கடினமான வார்த்தை பேசி விரட்டி விட்டார். அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பாதிரியார், டாக்டர்! நீங்கள் ஜெபம் செய்வதால் மட்டும் பலன் கிடைத்து விடாது. ஏழைகளுக்கு யார் ஒருவர் உதவுகிறாரோ, அவரது ஜெபமே ஆண்டவரால் ஏற்கப்படும், என்றார். பைபிளிலுள்ள ஒரு வசனத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் அல்லவோ எனக்கு (கர்த்தர்) உகந்த உபவாசம், என்பதே அந்த வசனம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதே நிஜமான பிரார்த்தனை என்பது புரிகிறதா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !