அடி பிரதட்சிணம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
ADDED :1387 days ago
அடி மேல் அடியாக, அடுத்தடுத்து இடைவெளியின்றி கால் வைப்பது அடிப் பிரதட்சிணம். இந்த நேர்ச்சையை செய்பவர்கள், நெய்க்குடம் சுமப்பவன் போல மெதுவாகச் சுற்ற வேண்டும் என்கிறது ஆகமம். நீண்ட நேரம் பொறுமையாகச் சுற்றுவதால், மனம் ஒருமுகப்படுகிறது. செயலில் வெற்றி பெறும் விதத்தில் மனபலம், தெய்வ அருள் உண்டாகிறது.