நடனக் கலையில் தேற!
ADDED :1336 days ago
நடராஜப்பெருமான் நடம்புரிந்த பஞ்ச சபைகளுள் ஒன்று திருவாலங்காடு ரத்ன சபை. இங்கு, ஈசனுடன் போட்டி தாண்டவமாடி காளி தோற்றாள். இறைவன், என்னையன்றி உனக்கு சமமானவர்கள் வேறு யாரும் இல்லை. ஆகவே, இத்தலத்துக்கு வருபவர்கள் முதலில் உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்கினால்தான் முழு பலன் கிடைக்கும் என அருளிய தலம். இங்கு காளிக்கு தனி சன்னிதி உண்டு. நடனக் கலையில் தேர்ச்சி பெற, கணவன் - மனைவி ஒற்றுமை பலப்பட இத்தல காளியையும் வடாரண்யேஸ்வரரையும் வணங்க நல்ல பலன் கிடைக்கும்.