பிரிந்தவர்கள் ஒன்று சேர!
ADDED :1336 days ago
திருவள்ளூர், பெரியபாளையம், கன்னிகைப்பேருக்கு அருகில் உள்ளது திருக்கண்டலம். இங்குள்ள சிவாநந்தீஸ்வரர் கோயிலில், சக்தி தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது வலது கரங்கள் அட்சர மாலை, அபயத்தோடும், இடது கரங்கள் அமுத கலசமும், ஏடும் ஏந்தி, அம்பாளை மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் பிருகு முனிவர் இறைவனை வணங்கியபடி காட்சி தருகிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் சக்தி தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்; திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.