அதிசய வேம்பு!
ADDED :1386 days ago
மதுரை பழங்காநத்தம் - டி.வி.எஸ். நகர் பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பாளுக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். இந்த அம்மன் கோயிலின் வளாகத்தில் உள்ள வேப்பமரம், பிணி தீர்க்கும் விருட்சமாகத் திகழ்கிறது. இதன் ஒவ்வொரு இலைக்கும் தனித் தனிச் சுவை உண்டு என்றும், குழந்தைப் பேறு தரும் அருமருந்தாக இந்த மரம் விளங்குகிறது. எனவும் இப்பகுதி பக்தர்கள் போற்றி வழிபடுகிறார்கள்.