உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

தேவதானப்பட்டி: மாசி கடைசி வெள்ளி காமாட்சி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.

தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 8ல்நிறைவு பெற்றது. நேற்று மாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டு கோயிலில் நெய் தீபமிட்டு வழிபட்டனர். முன்னதாக மஞ்சளாற்று சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தூய்மைப் பணி:
தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கோயில் வளாகம் முன்பு தூய்மை பணி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !