உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்று நாள் தேரோட்டம் நேற்று நிறைவடைந்தது.


பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம், 22ம் தேதி கம்பம் நடுதல், 4ம் தேதி முதல் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த, 10ம் தேதி துவங்கியது. கோவில் வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது.நேற்றுமுன்தினம் வெங்கட்ரமணன் வீதியில் இருந்து துவங்கிய தேரோட்டம், உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்பட்டது. சத்திரம் வீதியில் நிறுத்தப்பட்ட தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.நகைக்கடை உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கினர். நேற்று மாலை, துவங்கிய தேரோட்டம், தெப்பக்குளம் வீதி வழியாக மாரியம்மன் கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !