உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லடிக்காரர் கோயில் கொடியேற்றம்

வல்லடிக்காரர் கோயில் கொடியேற்றம்

மேலூர்: மேலுார், அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 முதல் மார்ச் 16 வரை சுவாமி புறப்பாடும் மார்ச் 17 ல் மஞ்சுவிரட்டும், மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மார்ச் 18 ல் கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச் 19 தேரோட்டமும், மார்ச் 20 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !