உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாக்கூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்

தஞ்சாக்கூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள பங்குனி உத்திர திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற உள்ளது.வருகிற 18ம் தேதி நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா அன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர்.அன்னதானம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும்,பூசாரியுமான பாலசுப்பிரமணியன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !