உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால்: காரைக்காலில் தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

காரைக்கால் தலத்தெரு தெட்சணமுத்து மாரியம்மன்,நடனகாளியம்மன், பத்திரகாளியம்மன் படைபத்திர காளியம்மன் கோவில் முளைப்பாலி திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று இரவு திருவிளக்கு பூஜை, நேற்று சிறுவர் காவடி,ஊர்க்காவடி,வரும் 14ம் தேதி முதல் நாள் சுவாமி புறப்பாடு,வரும் 16ம் தேதி தீச்சட்டி ஊர்வலம்,விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 17ம் தேதி நான்கு அம்பாள்களுடன் முளைப்பாலிகையுடன் வீதி உலாவாக எழுந்தருளி அரசலாற்றில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதில் நிர்வாகக்குழு தலைவர் பாஸ்கரன்,செயலாளர் ராஜ்மோகன்,பொருளாளர் செளரிராஜ்,துணை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !