உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடாமுனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை

ஜடாமுனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செமினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு எல்லை காவல் தெய்வமான ஜடாமுனீஸ்வரர் லிங்க ரூப சிலை, மகா நந்தீஸ்வரர் சிலை, பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தலைமை பூஜாரி ஆதி முத்துக்குமார் பூஜைகள் செய்தார்.18 வகை திரவ அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி மற்றும். நிர்வாக குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !