மறவபட்டி அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, யாக வேள்விகள் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய 2ம் நாள் நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைகளுக்குப்பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களான கணபதி, முருகன், கருப்பணசாமி மற்றும் நவக்கிரகங்களுக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பு நிகழ்ச்சிக்குப்பின் மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை மறவபட்டி அழகுமலையான் கோயில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.